Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழ்புவனகிரி வரசித்தி விநாயகர் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி அன்னாபிஷேகம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் 2,625 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் 2,625 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 நவ
2022
09:11

பெரம்பலுார்: கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், 2,625 கிலோ அரிசியில் சாதம் சமைத்து, அன்னாபிஷேகம் வெகுவிமர்சையாக நடந்தது.

அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜசோழன் மகன் ராஜேந்திரசோழனால் கங்கைநதி வரை போராடி வெற்றி பெற்ற சின்னமாக கட்டப்பட்டது. இக்கோயில் உலக பிரசித்திபெற்றது, புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. கோவிலில் சிங்கமுககிணறு, ஒரேகல்லிலில் ஆன நவக்கிரகம் பிரசித்தி பெற்றது.  இக்கோவிலில்  உலக அளவில் வியக்க கூடியதில் ஒன்றாக கோவிலில் உள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் கொண்டதாகும்.

இவ்வாறு சிறப்புமிக்க இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று, அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேகம் இன்று நடந்தது. இதற்காக, 75 கிலோ எடை உள்ள 35 மூட்டை என 2,625 கிலோ அரிசியால், மெகா சைஸ் குக்கரில் சாதம் சமைக்கப்பட்டு, உலர்த்தப்பட்டு மூங்கில் கூடைகளில் நிரப்பி, 109 சிவாச்சாரிகள் வரிசையில் நின்றவாறு அன்னத்தை சுமந்து சென்று லிங்கத்தின்மேல் சாத்தினர். பின்னர், மலர்கள், காய், கனிகளால் அலங்கரிக்கப்பட்டு, மாலை 6 மணியளவில்  மஹாதீபாராதனை நடந்தது. அன்னாபிஷேகத்திற்கு பின் தீபாராதனை முடிந்து, லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட அன்னம் இரவு 9 மணியளவில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதியிருந்த  சாதம் ஏரி, குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்பட்டது. லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறும். இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதால் திரளான பக்தர்கள் பங்கேற்று, லிங்கத்தின்மேல் சாத்தப்பட்ட அன்னத்தை பிரசாதமாக பெற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


முன்னதாக, 5ம் தேதி கணக்கவிநாயகருக்கு மகாபிஷேகமும், நாளை 6ம் தேதி திருவிளக்கு பூஜை, பிரகதீஸ்வரர், அம்பாள், மகிஷாசுரமர்த்தினி, சுப்ரமணியர் மற்றும் நவகிரகங்கள் ஆகியவற்றுக்கு மகாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இன்று 8ம் தேதி மூலவருக்கு ருத்ராபிஷேகமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் காஞ்சி சங்கரமட அன்னாபிஷேக விழா கமிட்டியினர் செய்திருந்தனர். நேற்று மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை, கூடலழகர் கோவிலில் புரட்டாசி பௌர்ணமியை  முன்னிட்டு பாலாபிஷேக கட்டளை சார்பாக ... மேலும்
 
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் இன்று வால்மீகி ஜெயந்தி விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
கேரளா, பாலக்காடு, கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா நவ., 07 ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar