சந்திர கிரகண நேரத்தில் காளஹஸ்தி சிவன் கோயிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2022 10:11
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று சந்திர கிரகணம் நிலவியதால் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களின் நடை சாத்தப்பட்டது. ஆனால் சிவ ஷேத்திரமான ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் மட்டும் சந்திர கிரகண சமயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தினர் .
இன்று செவ்வாய்க்கிழமை சந்திரகிரகணம் பகல் 2:39 முதல் மாலை 6:19 நிமிடங்கள் வரை சந்திர கிரகண சமயம் நிலவியதால் இந்த கிரகண காலத்தில் ஞான பிரசுனாம்பிகா சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு கிரகண சாந்தி அபிஷேகங்கள் நடத்தப்பட்டது .கிரகண சமயத்தில் சந்திரனிலிருந்து வெளிவரும் கதிர்கள் கோயில் மீது எந்தவித தாக்கமும் ஏற்படாது என்ற காரணத்தினால் திருமலை ஸ்ரீ ஏழுமலையான் கோயில் உட்பட ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களும் நடை சாத்தப்பட்டு அதன் பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நடை திறக்கப்படுவதோடு பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் இங்கு மூலவரான ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு நவகிரக கவசம் அலங்கரிக்கப்படுவதால் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மீது கிரகண கால சமயத்தில் எந்தவித தாக்கமும் ஏற்படாது என்ற காரணத்தினால் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடத்துவதாக கோயிலின் வேதப் பண்டிதர்கள் தெரிவித்தனர் .இதே போல் சந்திர கிரகண சமயத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானப்பிரசூனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்தால் அனைத்தும் விதமான தோஷங்கள் நிவர்த்தி அடையும் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதின. இதற்காக கோயில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்தனர். கோவிலில் கூட்டம் அதிகமானதால் இன்று பக்தர்களுக்கு "லகு"(நீண்ட தூரத்தில் இருந்து சாமி தரிசனம்) தரிசனத்தை ஏற்பாடு செய்தனர். சந்திர கிரகண சமயத்தில் பரணி போன்ற நட்சத்திரம் கொண்டவர்கள் இன்று சந்திர கிரகண சமயத்தில் சந்திரனை பார்க்க கூடாது என்றும் இதனால் தீயவை நிகழும் என்பவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்து கொண்டால் அனைத்தும் சுபம் நடக்கும் என்றும் தோஷ நிவாரணை நடக்கும் என்றும் கோயிலின் வேத பண்டிதர் அர்த்தகிரி சுவாமி தெரியப்படுத்தினார்.