Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்திர கிரகணத்தின் போது நின்ற ... திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
15ம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
15ம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

09 நவ
2022
01:11

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர பேரரசு காலத்தை ஒட்டிய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி வட்டம் கீழக்கொடும்பலூரில் பழமையான எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டு குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த கருப்பு ராஜா, பாண்டியநாடு பண்பாட்டு மைய கள ஆய்வாளர்கள் தாமரைக்கண்ணன், மீனாட்சி சுந்தரம் மற்றும் ஸ்ரீதருக்கு தகவல் தெரிவித்தார். ஆய்வுக்குப் பின் அவர்கள் கூறியதாவது; கல்வெட்டு கீழக்கொடுமலூர் வடக்கு பகுதி பகவதி அம்மன் கோயிலில் தேங்காய் உடைக்கும் படிக்கல்லாக இருந்தது. இதனால் எழுத்துக்கள் சிதைந்து காணப்படுகிறது. ‌ இதன்படி கல்வெட்டில் ஒன்பது வரிகள் இடம் பெற்றுள்ளன அவற்றில் சில மற்றும் தெளிவாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, அந்தராயம் உபயம் ல்லூர் மேற்கே காடு உட்பட நிலத்தில் பழந்தே அராய்ச்சியும் வெட்டிபாட்ட, என்ற வார்த்தைகள் மட்டும் தெளிவாக தெரிகிறது. இவற்றை வைத்து பார்க்கும் போது கல்வெட்டின் ஆரம்பமும், முடிவும் இல்லாத ஒரு துண்டு கல்வெட்டில், ஊரின் பெயரும், திசையும், இடத்தின் பெயர் இருப்பதால் நான்கு எல்லையை குறிக்கும் விதமாகவும், அந்த நிலத்தை இறையிலியாக கொடுத்ததற்கான அந்தராயம் உபயம் என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கிறது. மேலும் இப்பகுதியில் உள்ள கோயிலுக்கு விஜய நகர பேரரசு காலத்தில் நிவந்தம் கொடுத்திருக்கலாம் என்று கருதலாம். இந்த எழுத்தின் அமைப்பை பார்க்கும் போது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், இன்று புத்தாண்டு பிறப்பு மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
நாமக்கல்; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 3 டன் எடையுள்ள பல்வேறு மலர்களால், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar