பதிவு செய்த நாள்
10
நவ
2022
12:11
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆவலப்பம்பட்டியில், மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழா, கடந்த மாதம் , 25ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 1ம் தேதி, கொண்டேகவுண்டன்பாளையத்தில் இருந்து, ஆவலப்பம்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு, சக்தி கும்பம் மற்றும் கம்பம் எடுத்துச்செல்லும் நிகழ்ச்சிகள் நடந்தன. கம்பம் நடப்பட்ட பின், தினமும் இரவு, கோவிலைச்சுற்றி பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு, மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும், நேற்று அதிகாலை, அம்மனுக்கு திருக்கல்யாணம் மற்றும் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. திருவிழாவில், ஆவலப்பம்பட்டி ஜமீனுக்கு உட்பட்ட, கொண்டேகவுண்டன்பாளையம், 12 ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.