பதிவு செய்த நாள்
11
நவ
2022
06:11
சென்னை உள்பட தமிழக முக்கிய நகரங்களில் இருந்து, நவ., 17 முதல் சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
நவ., 17ல் கார்த்திகை பிறக்கும் நிலையில், சபரிமலையில் மண்டல பூஜை தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்கு, நவ., 17 முதல், 2023 ஜன., 18 வரை, சென்னை உள்பட தமிழக முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக சென்னை, மதுரையில் இருந்து தலா இரண்டு பஸ்கள், குமுளி, பம்பாவுக்கு இயக்கப்படும். அதைத்தொடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கைக்கேற்ப, 50 சிறப்பு பஸ்கள் வரை இயக்கப்படும். இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், குழுவாக செல்வோர், மொத்தமாக பஸ்சை வாடகைக்கு எடுத்து பயணிக்க விரும்புவோர், அந்தந்த மாவட்டங்களில் உள்ள விரைவு போக்குவரத்து கிளை மேலாளரை அணுகலாம். தனி நபராக செல்வோர், www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். குழுவாக செல்வோருக்கு சிறப்பு கட்டண தள்ளுபடி வழங்கப்படும் என்றனர்.