பதிவு செய்த நாள்
11
நவ
2022
05:11
நத்தம், நத்தம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள சைய்யாது ஷாஹ் ஹமீதுல் ஆஷிக்கின் தர்காவில் சந்தன உரூஸ் விழாவில் உலக நன்மை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது.
இதையொட்டி நேற்று நாகூரிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித சந்தன குடம் தர்காவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டது. அப்போது நாகூர் சலங்கை ஒலிக்க தக்பீர் ஒதி புனித சந்தனக் குடத்தை வக்கீல் முகம்மது சாலியா தலையில் சுமந்த வர ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டு சந்தனக் குடத் தெரு, பெரிய கடைவீதி, மஸ்தான் பள்ளிவாசல் வழியாக மீண்டும் பெரிய பள்ளி வாசலில் உள்ள தர்காவை வந்தடைந்தது. அங்கு புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. பின் உலக நன்மை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் கலந்து கொண்டார். சந்தன உரூஸ் விழா சந்தனக்குட ஊர்வலத்தில் வேம்பார்பட்டி பள்ளி வளர்ச்சி குழு தலைவர் கண்ணு முகமது, முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகர அவைத்தலைவர் சேக் ஒலி , நிர்வாகி குப்பன், வேம்பார்பட்டி ஜமாத் தலைவர் அபுத்தாஹிர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகிகள் முகம்மது சாலியா, முகம்மது மீரான், நசீர் அகமது சையது மீரான், சுல்பிகர், ஜல்வத்தி மற்றும் ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.