பதிவு செய்த நாள்
11
நவ
2022
06:11
அன்னூர்: கொண்டையம்பாளையம், அக்னி முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கோவில்பாளையம் அருகே கொண்டையம் பாளையத்தில், பழமையான அக்னி முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த 8ம் தேதி திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது. விமான கலசங்கள் நிறுவுதல், பீடத்தில் தெய்வங்களை வைத்து எண் வகை மருந்து சாத்துதல், வேள்வி பூஜை ஆகியவை நேற்று நடந்தது. இன்று காலை 8:30 மணிக்கு, விமான கலசங்கள், முத்துமாரியம்மன், விநாயகர், முருகன், கருப்பராயர் மற்றும் நவகிரகங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. விழாவில், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள் அருளாசி வழங்கினார். எம்.எல்.ஏ., அருண்குமார் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.