அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் டிச., 7ம் தேதி லட்சத்தி எட்டு தீபம் ஏற்றும் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2022 06:11
அவிநாசி: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஒரு லட்சத்தி எட்டு தீபம் ஏற்றும் திருவிழா நடைபெறுகிறது.
அவிநாசியில் உள்ள ஆன்மீக நண்பர்கள் குழு சார்பில், அவிநாசி லிங்கேஸ்வரர் கடந்த 2009 ம் ஆண்டு,தமிழகத்தின் தலைசிறந்த தவிலிசை கலைஞர்களைக் கொண்டு, வளையப்பட்டி சுப்பிரமணியம் தலைமையில் 101 தவிலிசை பக்தி இன்னிசை கச்சேரியை நடத்தினர் .அதனைத் தொடர்ந்து 2015ம் ஆண்டு கார்த்திகை திருநாளை முன்னிட்டு லட்சத்தி எட்டு தீபம் ஏற்றும் திருவிழாவை பக்தர்களுடன் ஒன்றிணைந்து நடத்தினர். தற்போது நடைபெற இருக்கின்ற கார்த்திகை தீபத்தை முன்னிட்டு டிசம்பர் 7ம் தேதி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் லட்சத்தி எட்டு தீபம் ஏற்றும் திருவிழாவை நடத்த உள்ளனர். இதனையடுத்து தீப திருவிழாவில் லட்சத்து எட்டு தீபம் ஏற்றும் உழவார பணிகளை மேற்கொள்ள விருப்பம் உள்ள பக்தர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும் ,லட்சத்து எட்டு தீப திருவிழாவில், விளக்குகள், எண்ணெய் உள்ளிட்டவைகள் வழங்க ஆர்வமுள்ள பக்தர்கள் பொருளாக மட்டும் தரவும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர் .மேலும் கார்த்திகை தீப விழா முடிந்ததும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. பிரசாதத்திற்கு தேவையானவைகளை பொருளாக வழங்க விருப்பம் உள்ள பக்தர்கள் ஆன்மீக நண்பர் குழுவின் தலைவர் சிவசுப்பிரமணியனை தொடர்பு கொண்டு பொருட்களை நன்கொடையாக வழங்கலாம் என தெரிவித்துள்ளனர்.