தூத்துக்கு: தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் 45 லட்ச ரூபாய் செலவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இதனை ஒட்டி வரும் 30ம் விமானத்திற்கு பாலாலயம் நடக்கிறது. தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் உபயதாரர் திருப்பணி மூலம் 45 லட்ச ரூபாய் செலவில் கோயிலில் பல்வேறு திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. பணிகள் நிறைவு பெற்றவுடன் கும்பாபிஷேகத்தை பெரிய அளவில் நடத்துவதற்கு அறநிலையத்துறை ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கோயிலில் வி மான பாலஸ்தாபன விழா வரும் 30ம் தேதி நடக்கிறது. இதனை ஒட்டி நாளை மாலை 6 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வரபூஜை, புண்யாயவாசநம், வாஸ்துசாந்தி, பிரவேசபரி, விமான கலாகர்ஷனம், முதல்கால யாகசாலை பூஜை, திரவியபகுதி பூர்ணாகுதி, தீபாரதனை, பிரசாதம் வழங்குதல் நட க்கிறது. 30ம் தேதி வியாழக்கிழமை காலை ஐந்தரை மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசநம், இரண்டாம்கால யாகசாலை பூஜை பூர்ணாகுதி நடக்கிறது. இதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் விமான பாலாலயம் நடக்கிறது. இதனை தொடர்ந்து தீபாரதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கோபாலன் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.