பதிவு செய்த நாள்
28
ஆக
2012
10:08
திருச்செந்தூர், ஆக.28- திருச்செந்தூர் சுப்பிரமணியபுரம் நாடார் தெரு ஸ்ரீ மாரியம்மாள் கோயில் கொடை விழா இன்று நடக்கிறது.திருச்செந்தூரில் சுப்பிரமணியபுரம் நாடார் தெரு ஸ்ரீ மாரியம்மன் கோயில் கொடை விழா கடந்த 21ம் தேதி கால்நட்டு விழா துவங்கியது. கொடைவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அம்பாளுக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனையும், இரவு சந்தனகாப்பு தீபாராதனையும் நடந்தது. இன்று 28ம் தேதி காலை 9 மணிக்கு அம்பாளுக்கு பால்குடம் எடுத்து வாணவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க ரதவீதி வலம் வந்து காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து 11.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. 12 மணிக்கு வாணவேடிக்கையுடன் அம்மன் கும்பம் எடுத்து வீதிஉலா நடக்கிறது. இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு புஷ்ப அலங்கார தீபாராதனையும் தொடர்ந்து 12.30 மணிக்கு அம்மன் கும்பம் எடுத்து வீதிஉலாவும் நடக்கிறது. நாளை 29ம் தேதி அதிகாலை 4 மணிக்கு படைப்பு தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் மாலை 4 மணிக்கு மஞ்சள்நீராட்டு, 5 மணிக்கு முளைப்பாரி எடுத்து திருக்கடலில் பிரி செலுத்துதலும் நடக்கிறது. விழா நாட்களில் கோயில் கலை அரங்கில் வில்லிசை, நையாண்டி, மேளம், மெல்லிசை உட்பட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்நிர்வாக கமிட்டி தலைவர் முருகன் நாடார், செயலர் செந்தில்குமார் நாடார், துணைத் தலைவர் செந்தில் வேல்நாடார், துணை செயலாளர் செந்தில்குமார் நாடார், பொருளாளர் ஜெகன் நாடார், கணக்கர் சந்தனக்குமார் நாடார், கொடை கமிட்டி சுரேஷ் பாபு நாடார், செந்தில்குமார் நாடார், வசூலர் சித்திரைவேல் நாடார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.