பதிவு செய்த நாள்
12
நவ
2022
02:11
தஞ்சாவூர்: மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நவ நதிகள் உள்ளிட்ட 45 புனித தீர்த்தங்களுடன் விஜயம் செய்த துறவியர்களுக்கு கிராம மக்கள் கொட்டும் மழையில் வரவேற்பு.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை மருத்துவக்குடியில் விசாலாட்சி அம்பாள் காசி விஸ்வநாதர் கோவில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய முறையில் திருப்பணி செய்து வரும் 20ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கங்கை, யமுனா, கோதாவரி, சிந்து, நர்மதை, தலைக்காவிரி, சரஸ்வதி ஆகிய சப்த நதிகள், கைலாயம் மானசரோவர் தீர்த்தம், பிரம்மபுத்திரா, துங்கபத்ரா, சரயு, குமரி தீர்த்தம், ராமேஸ்வரம் கோடி தீர்த்தம் உள்ளிட்ட 45 புனித தீர்த்தங்களுடன் அகில பாரதீய சந்நியாசிகள் நேற்று மாலை ஸ்ரீமத் சுவாமி ராமானந்தா தலைமையில் துறவியர்கள் மருத்துவக்குடிக்கு விஜயம் செய்தனர் ஊர் எல்லையான மகாகணபதி கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க கிராம மக்கள் துறவியர்களுக்கு வரவேற்பு அளித்தனர் பின்னர் காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் உலக நலன் வேண்டி துறவியர்களின் கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து காவேரி அம்மனுக்கு மற்றும் 45 புனித தீர்த்தங்களுக்கு சிறப்பு ஆராதனைகளுடன் வழிபாடு நடந்தது விவசாயம் செழிக்கவும் மக்கள் நலமுடன் வாழ யாக சாலை மண்டபத்தில் நவதானியம் விதைக்கப்பட்டது. பூஜைகளை சிவஞான சம்பந்த சிவாச்சாரியார் தெரிவித்த இதில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் மற்றும் திருப்பணி கமிட்டி தலைவர் ஸ்டாலின் கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் கிராம நாட்டாமைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
நாளை13ம் தேதி மாலை 4 மணிக்கு நதிகளின் புனித நீர் கலச பூஜையும், 18ம் தேதி காலை 9 மணிக்கு வீரசோழன் ஆற்றங்கரை காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்புடன், அலங்கார குதிரை, ஒட்டகம், செண்டை மேளம், மங்கள இசை முழங்க புனித நீர் எடுத்து வரும் ஊர்வலம் நடக்கிறது. மாலை யாகசாலை பூஜை முதல் காலம் தொடங்குகிறது. நான்கு கால யாக சால பூஜைகளுடன் மகா கும்பாபிஷேகம் 20ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடக்கிறது. இதில் சைவ வைணவ மடாதிபதிகள் கலந்து கொள்கின்றனர்.