ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே கைலாசநாதர் கோயிலில், ராமநாதபுரம் மங்கள நாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில், திருவாசகம் முற்றோதல் விழா நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு தீப ஆராதனை செய்யப்பட்டன. தொடர்ந்து சிவன் அடியார்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற வேண்டி, திருவாசக பாடல்களை மேள தால இசையுடன்பாடி பக்தர்களை பரவசப்படுத்தினர். இதில் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு திருவாசகப் பாடல்களை பாடினர். தொடர்ந்து சிவனடியார்கள், கைலாசநாதர் கோயில் வளாகத்தில் உழவாரப் பணியை மேற்கொண்டனர்.