தக்கலை: ஓம் சாந்தி பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் சார்பாக தக்கலையில் நவ.,15 முதல் 20 வரை 12 ஜோதி லிங்க தரிசனம் மற்றும் அமர்நாத் பனிலிங்க தரிசனம், ராஜயோக பட கண்காட்சி நடைபெற இருக்கிறது. அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெறுவதற்காக சிறப்பு வகுப்புகள் நடைபெற இருக்கிறது. மனதை வெல்வது எப்படி? நேர்மறையான எண்ணங்களை கொண்டு வருவது எப்படி? தன்னுடைய வாழ்க்கையில் நற்பண்புகளை கொண்டு வருவதில் பயன்கள் என்ன? மற்றும் சுயமே லாண்மை பற்றிய சிறப்பு வகுப்புகள் நடைபெற இருக்கிறது. தக்கலை பார்த்தசாரதி கோவிலில் காலை 10 மணி முதல் 12 வரை நடைபெறுகிறது. இதில் அனை வரும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.