செங்கத்துறை மாகாளியம்மன் கோவில் ஆண்டு விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2022 05:11
சூலூர்: செங்கத்துறை மாகாளியம்மன் கோவில் ஆண்டு விழா கோலாகலமாக நடந்தது.
சூலூர் அடுத்த செங்கத்துறையில் உள்ள மாகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு முதலாம் ஆண்டு விழா பூஜை, நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக பூஜை நடந்தது. அதன்பின், அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார மக்கள் பூஜையில் பங்கேற்று, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.