Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கத்துறை மாகாளியம்மன் கோவில் ... பாலமேடு மகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம் பாலமேடு மகாலிங்க சுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநங்கைகள் சொந்த காலில் நின்று உழைக்க பால்பண்ணை: தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் ஊக்கம்
எழுத்தின் அளவு:
திருநங்கைகள் சொந்த காலில் நின்று உழைக்க பால்பண்ணை: தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் ஊக்கம்

பதிவு செய்த நாள்

13 நவ
2022
05:11

தஞ்சாவூர், திருநங்கைகளின் வாழ்க்கைத்தரம் உயரவும், அவர்கள் சொந்த காலில் நின்று உழைக்கவும் பால்பண்ணை ஒன்றை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் அமைத்து கொடுத்துள்ளது.


தஞ்சாவூரை சேர்ந்த திருநங்கைகளின் ஒருங்கிணைப்பாளர் சத்யா உள்ளிட்ட ஐந்து பேர் பால் பண்ணை அமைத்து தரக்கோரி, தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தை நாடினர். அவர்களின் ஆர்வத்தை கண்ட மடத்தின் தலைவர் ஸ்ரீமத் விமூர்த்தானந்த மகராஜ் ஏற்பாட்டில், பாபநாசம் அருகே உதாரமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட கொத்தங்குடி கிராமத்தில் புஷ்பகலா, கவிதா ஆகியோர் தங்களது இடத்தில் திருநங்கைகளுக்கு மாடு வளர்க்க இடம் வழங்கினர். அதன்படி, ஏற்கெனவே ஒரு பசுமாடும், கன்றும் வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்த இடத்தில், மடத்தின் பக்தர் வெங்கடேசன் என்பவர் ஒரு லட்சம் மதிப்பீட்டில் மாட்டு கொட்டகை அமைத்து கொடுத்தார். மடத்தின் சார்பில் புதியதாக இரண்டு பசுவும், கன்றுகளும் வழங்கப்பட்டது. ஸ்ரீ சாரதாம்மா கோசாலை என்ற பெயரில் பால்பண்ணையாக மாறியது. இந்த பால்பண்ணையில் சிறப்பு பூஜைகள் நடத்தி செயல்பாட்டிற்கு வந்தது.


இதில், கலந்துக்கொண்ட சென்னை மாவட்ட வணிகவியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.சத்தியமூர்த்தி பேசியதாவது; திருநங்கைகள் மீது பலரும் அனுதாபம் காட்டுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேண்டியது அனுதாபமல்ல, மாறாக அவர்கள் சொந்த காலில் நின்று வாழும் தன்னம்பிக்கை தான் தேவை. தன்னம்பிக்கையை பெற அவர்களுக்கு முறையான வாழ்வாதாரம் தேவைப்படுகிறது. இந்த வாழ்வாதாரத்தை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் சரியாக வழங்கியுள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு சமூகத்தில் திருநங்கைகள் வாழ்ந்து காட்ட வேண்டும் இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் விமூர்த்தானந்த மகராஜ், உதாரமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பழனி, துணைத் தலைவர் குமார் மற்றும் கிராம மக்கள், திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி இன்று மரகத நடராஜருக்கு ... மேலும்
 
temple news
சிதம்பரம்: பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் முன் முள்படுக்கையில் ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் புத்தாண்டைய ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் அருள்மிகு குழந்தை வேலப்பர் மலை கோயிலை சுற்றி 108 விநாயகர் சிலைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar