பாலமேடு: பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டிக்கு சொந்தமான 500 ஆண்டுகள் பழமையான மகாலிங்க சுவாமி மற்றும் ஜீவ சமாதி மடத்தின் கும்பாபிஷேக விழா நடந்தது. நவ.,11ல் முதல் கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. இன்று காலை 3ம் கால பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. எம்.எல்.ஏ.,வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், மாணவரணி அமைப்பாளர் பிரதாப் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை மடத்து கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.