நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2022 10:11
நெல்லிக்குப்பம் : செல்லியம்மன் கோவிலில் நிகும்பலா யாகம் நேற்று நடந்தது. நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில், வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. வராஹி அம்மனை தேய்பிறை பஞ்சமி நாளில் வணங்கினால் திருமண தடை நீங்கும், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நேற்று நிகும்பலா யாகம் நடந்தது. தொடர்ந்து, வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை ராமு பூசாரி செய்தார்.