கடலாடி: கடலாடியில் கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தென் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாநில ஆலோசனை குழு உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். கடலாடி ஒன்றிய செயலாளர் லோகநாதன், மாவட்டத் துணைச் செயலாளர் அய்யனக்குமார், பரமக்குடி ஒன்றிய தலைவர் வைரவேல், ஒன்றிய செயலாளர் காமாட்சி, மந்திரமூர்த்தி, செந்தூர் கந்தசாமி, சந்திரன், வேலுச்சாமி உட்பட பல்வேறு ஒன்றிய ஒன்றியங்களில் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழக அரசிடம் ஓய்வு ஊதியம் கேட்டு விண்ணப்பம் செய்துள்ள தகுதியான பூசாரிகளின் விண்ணப்பத்தை தேர்வு செய்து ஓய்வூதியம் கிடைக்கச் செய்ய வேண்டும். கடந்த 2010ம்ஆண்டு பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு மேலானதால் சைக்கிள் பழுதடைந்துள்ளது எனவே இந்து சமய அறநிலைத்துறையில் மூலம் மீண்டும் பூசாரிகளுக்கு விலை இல்லாத சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.