பதிவு செய்த நாள்
29
ஆக
2012
10:08
பழநி: பழநி கோவில் உண்டியல் வசூல், 1.17 கோடி ரூபாயைத் தாண்டியது. தலா 500 கிராம் எடையுள்ள ஏழு வெள்ளிக் கட்டிகள், காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்தன. உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டன. ரொக்கம், ஒரு கோடியே 17 லட்சத்து 29 ஆயிரத்து 30 ரூபாய். தங்கம் 569 கிராம். வெள்ளி 7,540 கிராம். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளின் கரன்சி, 732. தங்கத்தினால் ஆன வேல், நாணயம், திருமாங்கல்யம், செயின், மோதிரம், வெள்ளியால் ஆன, வேல், வீடு, ஆள் ரூபம், பித்தளையால் ஆன, வேல், மணி மற்றும் பரிவட்டங்கள் காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்தன. தலா, 500 கிராம் எடையுள்ள, ஏழு வெள்ளிக் கட்டிகள், 108 தீபம் ஏற்றக்கூடிய சரவிளக்குகள் இருந்தன. 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. உண்டியல் திறப்பின் போது, இணை கமிஷனர் பாஸ்கரன், அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமேஷ், முதுநிலை கணக்கியல் அதிகாரி ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.