தேவகோட்டை: தேவகோட்டையில் திருமலை திருப்பதி ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் இன்று நடக்கிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம், சின்ன மைனர் பாலன் பவுண்டேசன் இணைந்து, தேவகோட்டையில் இன்று மாலை நகரத்தார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், மாலை 5 மணிக்கு திருப்பதி ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடத்துகின்றனர். திருப்பதியிலிருந்து ஸ்ரீனிவாச பெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி தாயார் உற்சவ மூர்த்திகள் மதியம் 1.30 மணிக்கு அலங்கார ரதத்தில் வந்தனர். உற்சவ குழு தலைவர் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர்.,லெட்சுமணன் தலைமையில் நிர்வாகிகள்,பொதுமக்கள் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். இன்று அதிகாலை சுப்ரபாத பூஜை சாய்ராம் திருமண மண்டபத்தில் நடக்கிறது.