Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயிலில் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அஷ்ட சாஸ்தா கோயில் திருப்பணி: பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அழைப்பு
எழுத்தின் அளவு:
அஷ்ட சாஸ்தா கோயில் திருப்பணி: பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அழைப்பு

பதிவு செய்த நாள்

17 நவ
2022
04:11

சாஸ்தா என்றதும் நம்மில்பலருக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால் உலகமெங்கும் சாஸ்தா வழிபாடு நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. கலியுகவரதனான சபரிமலை  ஐயப்பன் என்பது சாஸ்தாவின் அவதாரங்களில் ஒன்று.  அமெரிக்காவில் “சாஸ்தா” பெயர் கொண்டமலை (Mount Shastha)  சாஸ்தா ஏரி (Shastha Lake), சாஸ்தாபூங்கா (Shastha Park) இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சாஸ்தா என்று அங்கு வாழ்ந்த ஆதிவாசிகளால் (செவ்விந்தியர்கள்) கி.மு. முன்பாக வழிபட்ட கடவுளாக இருந்தார்.  அதேபோல் ஏதென்ஸ் (Italy) நாட்டை ஆண்ட மன்னர்கள் பெயர்களில் பாண்டியன் (Pandian 1 1437- 1397 BC) அவர்பிள்ளைகள் எறிச்சாத்தன் (Erechatus) , பூதன் (Bhutes), மனைவி பிரதஷினை (Praxither) போன்ற பெயர்களை பார்க்கும் போது அங்கு பாண்டியர்கள் ஆட்சியும், சாஸ்தா வழிபாடும் இருந்ததாக தெரிகிறது. கம்போடியா&அங்கோர்வாட் கோவிலில் சபரிமலை ஐயப்பன் போன்ற சிற்பங்களை காணமுடிகிறது.

கிருதயுகத்தில், கந்தபுராணத்தில் முருகபெருமான் அவதாரத்திற்க்கு முன்பே சாஸ்தா இந்திராணியை காத்தருளியதை பற்றி விவரித்து உள்ளது (இடம் : சீர்காழி அருகில் கைவிளாஞ்சேறி சாஸ்தா கோவில்).  திரேதாயுகத்தில், இராமர் சீதா தேவியை மணக்க, “சிவதனுசு” வில்லை சாஸ்தாவின் ஆவேச சக்தியை கொண்டு முறித்ததாக கரந்தையர் பாளையம் வரலாறு கூறுகிறது.  ராமர் காலத்தில் வாழ்ந்த அத்ரிமகரிஷி வழிபட்ட சாஸ்தா கோவில் சுசீந்திரம் (ஆஸ்ரமம்) அருகில் உள்ளது.  துவாபரயுகத்தில் (மகாபாரதகாலம்) சாஸ்தா தோன்றியதற்கான ஆதாரம் உள்ளது (இடம் : சிதம்பரம் அருகே உசுப்பூர் சாஸ்தா கோவில்).  கலியுகத்தில் பம்பையில் தவழ்ந்து பந்தள பாலகனாக மகிஷியை சம்ஹாரம் செய்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஸ்ரீஆதிபூதநாதர்: சாஸ்தாவின்மற்றொருபெயர் பூதநாதன்ஆகும்.  பஞ்சபூதங்களையும் அடக்கி ஆள்பவர். பூதநாத சதானந்தா சர்வபூத தயாபரா ரஷ ரஷமஹா பாஹோ சாஸ்த்ரேதுப்யம் நமோ நமஹ” என்ற ஸ்லோகத்தில் சாஸ்தாவை பூதநாதனாக வர்ணித்து இந்த உலகையே காக்க வேண்டுகின்றோம்.

ஸ்ரீஞானசாஸ்தா: “ஓம்வித்யாவிருஷாயநம, ஓம்தஷிணாமூர்த்திரூபகாயநம” போன்றநாமங்கள்நமக்குணர்த்தும்விஷயங்கள்: சாஸ்தாமாணிக்கவீணையைஏந்தியகையுடன், கல்லால மரத்தின்அடியில் அமர்ந்து மேதாதஷிணாமூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.  வித்யை: ஞானத்திற்கு அதிபதி.

ஸ்ரீமஹாசாஸ்தா: “ஓம்மஹாசாஸ்த்ரேநம” என்ற மந்திரமேசாஸ்த்ரு அஷ்டோத்திரத்தின் முதல் மந்திரமாகும்.  காலசாஸ்தா, கஜாரூடசாஸ்தா என்று அழைப்பதும் வழக்கம். “ஓம்காலநாசனதத்பராயநம” கால - எமனை, நாசன - அழிக்கும், தத்பர - கருத்துள்ளவன், எமபயம்அகற்றுபவன்.

ஸ்ரீசம்மோஹனசாஸ்தா: திருமுருகவேள் அவதார காலத்திற்கும் முன்பே சாஸ்தா வெள்ளை யானை மேல் பூர்ண-புஷ்களாவுடன் காட்சி தந்ததாக தொன்மையான புராணமான கந்தபுராணம் நமக்கு கூறுகிறது.  இந்திரன் பூலோகத்தில் இல்லாத நேரத்தில் சாஸ்தாவின் பாதுகாவலில் இந்திராணியை விட்டுச்சென்றார் என்பதும் நமக்கு தெரிகின்றது. (இடம் : சீர்காழி கைவிளாஞ்சேறி சாஸ்தா கோவில்)

ஸ்ரீசந்தானப்ராப்திசாஸ்தா: ஹரிஹரபுத்திரரான சாஸ்தாவை மும்மூர்த்திகளின் அம்சம் என்றும் கூறுவதுண்டு. பிரம்மனும் இணைந்து மும்மூர்த்திகளின் அம்சமாக சாஸ்தாவை தியானிக்கும் போது பிரம்மனது சக்தியாம் சரஸ்வதியானவள் பிராபாவதியாக கொலு விருப்பதாகவும், ஸத்யகன் என்ற செல்லப்பிள்ளையும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.  பிள்ளை பேறுஅளிப்பவர்.

ஸ்ரீவீரசாஸ்தா: “துரகவாகனம்ஸுந்தரானனம்” என்ற ஹரிஹரசுதாஷ்டகம் (ஹரிவராசனம் விஸ்வமோஹனம் பாடல்) சாஸ்தாவை குதிரை மேல் வர்ணித்துள்ளார். “அஸ்மத்குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ருவினாஸனம்” என்ற ஸ்லோகத்தில் சாஸ்தாவை குதிரை மேல் வந்து சத்ருக்களை அழிப்பவனாக சாஸ்தாவை வர்ணித்துள்ளனர். தமிழ்நாட்டில் பல கிராமங்களில் குதிரை வாகனத்தில் அய்யனார் (சாஸ்தா) கோவில்கள் பல காணலாம்.

ஸ்ரீவேதசாஸ்தா: சாஸ்தாவை “விப்ரபூஜ்யம்” என்று போற்றுகிறோம் - வேதம்கற்றறிந்தவர்களால் பூஜிக்கப்படுபவன் என்று பொருள்.  தாரகபிரம்மம்மான சாஸ்தாவின் முகத்தில் இருந்து தான் வேதங்கள் தோன்றின. “வேதமுகாயைநம” வேதங்கள் தோன்றிய முகமுடையவன் என்றுரைக்கிறது.  “ஓம் மந்திர வேதினேநம, ஓம் மஹாவேதினேநம, ஓம் ரிக் யஜு ஸ்சாம அதர் வரூபிணேநம” போன்ற சாஸ்தா சஹஸ்ரநாமத்தை பார்க்கும் போது இந்த வேதயக்ஞங்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்து நற்பலனை வழங்குபவர் என்பது தெளிவாக தெரிகிறது.

ஸ்ரீகல்யாணவரதர்: ஹரிஹரசுதனாக அவதரித்துக்கயிலையில் காந்தகிரியில் கொலுவிருக்கும் சாஸ்தாவுக்குப் பூர்ணா புஷ்களா என்று இருதேவியர் உள்ளனர் என்பதுவரலாறு.  லலிதாஸஹஸ்ரநாமத்தில் வரும் “பூர்ணா”  எங்கும் வியாபித்து இருப்பவள் என்றும் “புஷ்களா”  எங்கும் நிறைவாகி இருப்பவள் என்றும் பொருளாம்.

ஸ்ரீசபரிமலை தர்மசாஸ்தா: கலியுகத்தில் பம்பையில் தவழ்ந்து பந்தள பாலகனாக வளர்ந்து மகிஷியை ஸம்ஹாரம்செய்து, வன்புலிவாகனனாகத் தோன்றி பூதநாத கீதை உபதேசம் செய்தருளி சபரிமலையில் கோயில் கொண்டார் சாஸ்தா என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

ஆன்மீக உலகிற்கு சாஸ்தா அவதாரங்களை பற்றி 1980ல் இருந்து விஸ்வநாதசர்மா என்ற ஐயப்ப குருஸ்வாமி சாஸ்தா திருக்கல்யாணம் மூலம் பல விளக்கவுரைஅளித்துள்ளார். மேலும் ஐயப்ப வழிபாட்டில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து, ஆதாரங்கள் திரட்டி, தியானஸ் லோகங்கள் அடிப்படையில், பஞ்சலோக வடிவங்களை அமைத்தார்.  அவர் முயற்சிகளை திருவினையாக்க, உலகிலேயே முதன் முறையாக சாஸ்தாவின் எட்டு வித அபூர்வ நிலைகள் கொண்ட நுாதன ஆலயம் ஒன்றுஅமைக்க அவரது குழுவினர் முயற்சிகள் எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.  

“எட்டு வதாரங்கள் உண்டு எட்டு ஸ்வரூபங்கள் உண்டு” என்பது புராதானமான பாடல். தனது குருநாதர் வடிவமைத்த எட்டு அவதாரங்கள் பஞ்சலோக விக்கிரஹங்களை அடிப்படையாக கொண்டு திருக்கோயில் கட்ட முனைகின்றனர். இக்கோவில் திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டில் ஆன்றோர்கள் ஆசியுடனும், பக்தர்களின் பேராதரவுடனும் விமரிசையாக கட்டப்பட்டுவருகிறது. 18 படிகள் மேல் ஐயப்பன் மற்றும் பூர்ணா-புஷ்களா ஸமேத ஆதிபூதநாதர் வந்துள்ளனர். மற்ற 7 சன்னதிகள் கீழ்தளத்தில் வரஉள்ளது. மேலும், இத்திருப்பணி நிறைவு பெற சுமார் 50 லட்சங்கள் தேவைப்படுகிறது.  திருப்பணி செய்ய விரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Bank Account details
Account Number : 40422654402
Account Name     : Villivakkam Sree Viswanatha Sharma Ashta Sastha Trust
Bank Details         : State Bank of India, Villivakkam branch (7108)
IFSC Code             :  SBIN0007108

Villivakkam Sree Viswanatha Sharma Ashta Sastha Trust
Sree Ashta Sastha Temple, Vepampattu
Sai Nagar & Balaji Nagar, Vepampattu-89
Tiruvallur District, Pincode : 602 024
Ph: +91 94441 09431

வேப்பம்பட்டு செல்லும் பேருந்துகள்: M54V, 54V, 77V, M77V(Extn), 71V, 70P, 40A, Ext 571, 572, 572K

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் இன்று நடந்த கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ பூஜையில் ஏராளமானோர் ... மேலும்
 
temple news
திருச்சி:  காவேரி (ஆற்றங்கரை) ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சுவாதி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு தங்க ... மேலும்
 
temple news
பெரியகுளம்; வரதராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடப்பதற்கு மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
திருத்தல வரலாறு; இத்திருக்கோவில் சிறந்ததொரு புராண தலமாகும். பிரமாண்ட புராணத்தில் இக்கோவிலைப் பற்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar