பதிவு செய்த நாள்
29
ஆக
2012
10:08
சேலம்: சேலம், அரிசிப்பாளையம் குழந்தையேசு பேராலயத்தின் அங்கமான, சாமிநாதபுரம் புனித வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின், 29ம் ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மாலை, 6 மணிக்கு, சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் கொடியேற்றி வைக்கிறார்.தொடர்ந்து, அன்னை தேர்பவனி, செபமாலை, சிறப்பு திருப்பலி மறையுரையுடன் நடக்கிறது. இதில், மூவேந்தர் அரங்க இயக்குனர் விமல்தாஸ், வேலூர் மறைமாவட்ட அந்தோணிராஜ், பேராசிரியர் சேவியர்டெர்ரன்ஸ், திருச்சி மறைமாவட்ட மதலை, திண்டுக்கல் அருள், ஊட்டி மறைமாவட்ட பாஸ்கல், சமூக சேவை சங்க இயக்குனர் செல்வம் பிரான்சிஸ் சேவியர், விவிலியப்பணிக்குழு இயக்குனர் ஜோசப் லாசர், தர்மபுரி மறைமாவட்ட ஸ்டீபன் ஆகியோர் அருளுரை வழங்குகின்றனர்.செப்டம்பர், 8ம் தேதி, பகல், 12.30 மணி முதல், பிற்பகல், 3 மணி வரை, பொங்கல் மந்திரிப்பு, அன்னதானம், சமபந்தி விருந்து நடக்கிறது. மாலை, 6 மணியளவில், பெங்களூரு மறைமாவட்ட ஜோசப் அபிரகாம் தலைமையில் கூட்டு பாடற் திருப்பலி, இரவு, 7.30 மணிக்கு தேர் மந்திரிக்கப்படும். தேர்பவனி முடிவில் நற்கருணை ஆசிர்வாதம் வழங்கப்பட உள்ளது. மறுநாள் காலை, 7 மணிக்கு நன்றித்திருப்பலி, கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.