பதிவு செய்த நாள்
20
நவ
2022
10:11
மூணாறு: சபரிமலையில் மகர விளக்கு சீசன் துவங்கியதால் இடுக்கி மாவட்டத்தில் பக்தர்களில் வசதிக்காக கட்டுப்பாட்டு அறைகள், ஹெல்ப் டெஸ்க்குகள் ஆகியவை திறக்கப்பட்டு செயல்பட துவங்கின.
இடுக்கி மாவட்டத்தில் வண்டிபெரியாறு, குமுளி ஆகிய பகுதிகள் வழியாக சபரிமலைக்கு வாகனங்களிலும், சத்திரம், புல்மேடு வழியாக காட்டு வழியிலும் பக்தர்கள் ஏராளம் சென்று வருவதுண்டு. பக்தர்கள் பாதுகாப்புடன் சபரிமலை சென்று திரும்பும் வகையில் இடுக்கி மாவட்ட நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதன்படி பக்தர்களுக்கு சிறப்பாக சேவை செய்யும் வகையிலும், ஏற்பாடுகளை உறுதி செய்யவும், பக்தர்களை மோசடி செய்யும்பட்சத்தில் புகார்களுக்கு தீர்வு காணும் வகையிலும் பல்வேறு பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் 24 மணி நேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள், ஹெல்ப் டெஸ்க்குகள் ஆகியவை திறக்கப்பட்டு செயல்பட துவங்கின.
அதன் விபரம் வருமாறு: கட்டுப்பாட்டு அறை, கலெக்டர் அலுவலகம், இடுக்கி-04862- 232242.
கட்டுப்பாட்டு அறை, கிராம நிர்வாக அலுவலகம், மஞ்சுமலை பொறுப்பு அதிகாரி பீர்மேடு தாசில்தார் -94470 23597.
ஹெல்ப் டெஸ்க்குகள்: கிராம நிர்வாக அலுவலகம், மஞ்சுமலை-04869-253362, 8547612909. ஹெல்ப் டெஸ்க்குகள் தினமும் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும்.