ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர்பெருமாள் கோயிலில் தீப மஹோத்ஸவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2022 11:11
ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர்பெருமாள் கோயிலில் , நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்ரீ மாருதி நண்பர்கள் குழு மற்றும் திரு.சௌரிராஜன் அவர்களின் கைங்கரியமான ஸ்ரீ லெட்சுமி நரசிம்மர் சன்னதியில் 21-ம் ஆண்டுக்கான ஸஹஸ்ர தீப மஹோத்ஸவம் நடைபெற்றது. இதனையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் கோயிலில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது. காலை 10.00 மணியளவில் கோயில் ஆஸ்தான நாதஸ்வர வித்வான் திருக்கண்ணபுரம் டாக்டர்.திரு. சௌரிராஜன்; குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 11.00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், பக்தர்கள் தரிசனமும், மாலை 4.30 மணி முதல் ஆன்மீக சொற்பொழிவு, நாதஸ்வர இசை நிகழ்ச்சி, சங்கீத ஆராதனை மற்றும் நாம சங்கீர்தனம் நடைபெற்றது. மாலை 6.00 மணி அளவில் ஆயிரம் தீபம் ஏற்றுதல் வைபவம் நடைபெற்றது.