கார்த்திகை சோமவாரம் : சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2022 11:11
திருப்பூர்: கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு திருப்பூர், ஊத்துக்குளி ரோடு சுக்ரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை திங்கள் முதல் சோமவாரத்தையொட்டி 108 வலம்புரி சங்குகள் பூக்களால் அலங்காரம் செய்யபபட்டு சுவாமி சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.