பதிவு செய்த நாள்
21
நவ
2022
02:11
நாகர்கோவில்: நாகர்கோவில் ஆதிபராசக்தி சக்திபீட கோவிலில் வருஷாபிஷேக விழாவினை முன்னிட்டு மத நல்லிணக்கம் வளரவும், மனிதநேயம் தழைக்கவும், இயற்கை சீற்றம் தணியவும் கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது.
இதையொட்டி அதிகாலை ஆதிபராசக்திக்கு 18 வகை யான சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் , சக்திபீட தலைவர் சின்னதம்பி தலைமையில் கூட்டு தியானம் நடந்தது. பக்தர்களுக்கு காலையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துணைத்தலைவர் அருணாசலம் துவக்கி வைத்தார். காலை குருபூஜை, விநாயகர் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. வேள்வியில் முன்னாள் கேரள மாநில நீதிபதி சுப்ரமணியன் கலந்து கொண்டார். 153 ஆடவர், மகளிர்க்கு ஆடைதானத்தை சிறப்பு விருந்தினர் வழங்கினார். தொடர்ந்து தைப்பூச இருமுடி சக்தி மாலை அணிதல் நிகழ்ச்சி நடந்தது. சக்தி மாலையை சக்திபீட தலைவர் சக்தி சின்னதம்பி மாலை அணிவித்து விரதத்தை துவக்கி வைத்தார். அன்னதானத்தை சக்திபீட பொருளாளர் அசோக்குமார் துவக்கி வைத்தார். பாலப்பள்ளி குமாரி முருகேசன் , குமாரி ராமசந்திரன் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சக்திபீடத்தலைவர் சின்னத்தம்பி தலைமையில் , துணைத் தலைவர் அருணாசலம் , பொருளாளர் அசோக்குமார், செயலாளர் எஸ்.ஆர். சந்திரன், மகளிர் அணித்தலைவி செல்வரெத்தினம், நாகராஜன், சுப்பிரமணியன், செந்தில், பால்ராஜ், ராமகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணன் கோவில் சக்திபீடத்தினர் செய்திருந்தனர்.