பதிவு செய்த நாள்
22
நவ
2022
06:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை சோமாவாரத்தையொட்டி, 1,008 சங்காபிஷேகம் நடந்தது. கார்த்திகை மாதம் பிறந்த நிலையில், அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா களை கட்ட தொடங்கியுள்ளது. வரும், 27ல் கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்க உள்ளது. நேற்று கார்த்திகை மாத சோமாவாரத்தையொட்டி, சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில், சிறப்பு யாக சாலை அமைக்கப்பட்டு, 1,008 சங்குகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின், யாக சாலையில் வைக்கப்பட்ட சங்காபிஷேக நீரை கொண்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.