முத்துமாரியம்மன் அவதார தினம்: 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2022 06:11
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று பக்தர்கள் 1008 பால்குடம் எடுத்தனர்.
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் அவதரித்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று ஓம் சஷ்டி சேவா சார்பில் 11வது ஆண்டு, பால்குட விழா நடந்தது. பக்தர்கள் 1008 பால்குடம் எடுத்துக் கொண்டு, முத்தாளம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு கல்லுக்கட்டி, செக்காலை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து மாலையில் பலகார நெய்வேத்தியம் நடந்தது.