காரைக்கால்: காரைக்காலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு அகல்விளக்கு செய்யும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் மேலஓடுதுறை. கோட்டுச்சேரி.நிரவி உள்ளிட்ட பகுதிகளில் அகல்விளக்கு செய்யும் பணி நடைபெறுகிறது.இதில் டிச.6ம் தேதி கார்த்திகை திருநாளை முன்னிட்டு மேலஒடுதுறையில் பகுதியில் அகல் விளக்குகளை செய்யும் பணிகள் துவங்கியது. மேலும் கோட்டுச்சேரி,ஓடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு அகல்விளக்கு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். மேலும் இதுக்குறித்து மேலஓடுதுறை மண்பாண்ட தொழிலாளர் மாரியப்பன் கூறுகையில்.மண்பாண்ட தொழிலில் கடந்த 30ஆண்டுகளாக ஈடுப்பட்டு வருகிறோம் அகல் விளக்குகள் இந்த வருடம் நாகப்பட்டினம், திருவாரூர், பொறையார் ஆகிய பகுதிகளில் இருந்து அகல்விளக்கிற்கு ஏராளமான ஆர்டர்கள் வந்துள்ளது. ஆனால் இந்தாண்டு தொடர் மழையால் அகல்செய்யும் மண் கிடைக்கவில்லை இதனால் தமிழத்திலிருந்து அதிகம் விளைகொடுத்து மண்னை வாங்குநிலையில் உள்ளனர்.மேலும் தமிழகத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு மண்பாண்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் நிவராணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் புதுச்சேரி மாதிலத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைள் வழங்குவதில்லை எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் சகிலா என்ற கைவீல் கொண்டு அகல்விளக்கு செய்து நல்ல வெயிலில் அகல்விளக்கை காயவைத்து சுட்டு விற்பனை செய்துவருகிறோம்.100 அகல்விளக்கு ரூ.90 முதல் ரூ110 வரை வெளியில் உள்ள வியாபரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர் மேலும் பொங்கல் பண்டிகை வருவதால் பொங்கல் பானை செய்யும் பணி அகல்விளக்கு பணி முடிந்தவுடன் துவங்கப்படும் என்று கூறினார்.