நிழல் கிரகங்களான ராகு கேதுவால் உண்டாகும் கொடிய தோஷம் காளசர்ப்பதோஷமாகும். சர்ப்பதோஷம், நாகதோஷம் போன்ற தோஷங்களும் இச்சர்ப்ப கிரகங்களாலேயே உண்டாகின்றன. வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவின் படுக்கையாக விளங்கும் ஆதிசேஷனே ராமானுஜராக பிறந்ததாக விஷ்ணுபுராணம் கூறுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் தானுகந்த திருமேனியில் காட்சிதருகிறார். இச்சிலையை இவர் வாழ்ந்த காலத்திலேயே ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் நிறுவினர். ஆதிசேஷனுக்கு அனந்த சர்ப்பம் என்னும் பெயரும் உண்டு. இங்குள்ள குளத்திற்கும் அனந்தசரஸ் என்றே பெயர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அனந்தசரசில் நீராடி ஆதிகேசவப்பெருமாள், யதிராஜவல்லி தாயார், ராமானுஜரைத் தரிசிப்பது காளசர்ப்ப தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும்.