தருமையாதீனம் 26வது குருமஹா சன்னிதானம் இதற்கு எளிமையாக விளக்கம் சொல்லியுள்ளார்கள். நாம் கேட்டுக் கொடுப்பது மனித இயல்பு. கேட்காமலேயே கொடுப்பது தெய்வ இயல்பு. நல்ல பெற்றோருக்கு குழந்தையாகப் பிறந்திருக்கிறோம். ஆணாக அல்லது பெண்ணாக எல்லா உறுப்புகளோடும் நல்ல முறையில் பிறந்திருக்கிறோம். நல்லது கெட்டதை சிந்தித்துச் செயல்பட நல்ல அறிவு பெற்றிருக்கிறோம். நாம் தூங்கும் போது கூட இதயம் செயல்படுகிறது. மூச்சு விடுவதை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் நினைவில் வைத்துக் கொண்டு மூச்சு விட வேண்டும் என்றிருந்தால் எத்தனை பேர் உயிரோடு வாழ முடியும்? இவை எல்லாமே நாம் கேட்காமலேயே இறைவன் அளித்துள்ள அற்புத வரங்கள். இதற்கு நன்றி சொல்வதற்கே இப்பிறவி போதாது. மேலும் மேலும் கேட்டுக் கொண்டேயிருப்பதற்கு வேறு என்ன இருக்கிறது? என்பது அவரது விளக்கம். இதைவிட வேறு விளக்கம் தேவையா? எனவே, இறைவனிடம் எதையும் கேட்க வேண்டாம். ஏற்கனவே கொடுத்ததற்கு நன்றியோடு வழிபடுங்கள்... போதும்.