தேவிபட்டினம்: தேவிபட்டினம் கடலுக்குள் நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு தோஷ நிவர்த்திகளுக்காக பரிகார பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று சந்திர தரிசனம் என்பதால், நவகிரகங்களான சந்திரன், ராகு, கேது, சனி உள்ளிட்ட நவகிரகங்களுக்கு சந்திர தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நடைபெற்ற சிறப்பு பூஜையில், பக்தர்கள் கலந்து கொண்டு நவக்கிரகங்களை சுற்றி வந்து தரிசனம் செய்தனர்.