கல்லால் செய்யப்பட்ட கற்சிலைகள் மற்றும் கிராமிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2022 03:11
மேலூர்: வஞ்சிநகரத்தில் பூமியினுள் இருந்து கல்லால் ஆன கற்சிலைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள கோயில் மற்றும் கல்தூன்களில் பிராமிய வட்ட எழுத்துக்கள் காணப்படுவதால் தொல்லியல்துறையினர் ஆய்வு செய்து இப் பகுதியில் புதைந்து கிடக்கும் வரலாற்றை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதே கிராமத்தார்களின் எதிர்பார்ப்பாகும்
வஞ்சிநகரம் ஊராட்சி கல்லங்கரடு என்னும் இடத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதியாக உள்ளது நேற்று முன்தினம் பெய்த மழைக்கு கல்லான் ஆன சிலை வெளியே தெரியவே பக்தர்கள் தோண்டினர். அதில் கல்லால் ஆன நந்தி சிலை, சிவலிங்கம் மற்றும் பீடம் உள்ளிட்ட கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. தவிர தற்போது வஞ்சிநகரம் என்றழைக்கப்படும் ஊர் கரபிநாடாகவும், தற்போது அழிந்துள்ள கல்லங்கரடு அதிகாரத்து ஊராக இருந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. பொதுமக்கள் பழனிச்சாமி கூறுகையில் : 300 ஏக்கர் பரப்பளவில் 10 ஏக்கர் பரப்பளவில் கல்லன்கரடு பகுதி ஒரு பெரிய நகரமாக இருந்து அழிந்து போனதற்கான அடையாளங்கள் மற்றும் 700 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கி.பி., 1223 ல் கட்டப்பட்டதற்கான ஆதாரம் அங்குள்ள அகிலாண்டேஸ்வரி, அகளங்கேஸ்வரர் கோயில் பிராமிய எழுத்துக்களால் ஆன கல்வெட்டுக்கள் குறிப்பிடுகிறது. தவிர பாண்டிய மன்னர் காலத்தில் முகலாய பேரரசுகள் படை எடுத்து வரும் பொழுது இப் பகுதி அழிக்கப்பட்டதாக வரலாறு உள்ளது எனவே இக்கல்வெட்டுக்களை தொல்லியல்துறையினர் அகழ்வாராய்ச்சி செய்து புதைந்து கிடக்கும் வரலாற்றை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.