ராஜபாளையம்: ராஜபாளையம் சொக்கர் கோயில் திருமண மண்டபத்தில் ஹரிஹர குருஜீ பக்த சமாஜம் சார்பில் சாஸ்தா திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு சனிக்கிழமை காலை 6:00 மணி முதல் மகா கணபதி, பரிவார மூர்த்திகள் ஹோமம், அலங்காரம், வீதி உலா நாம சங்கீர்த்தனம் இரவு 10:00 மணி வரை நடந்தன. முக்கிய விழாவான திருக்கல்யாணம் நிகழ்சிக்காக நேற்று காலை 8:00 மணிக்கு தொடங்கி பல்வேறு ஆராதனை வழிபாடுகள், மயிலாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மதியம் 2:00 மணிக்கு மேல் பூர்ணாம்பிகா, புஷ்களாம்பிகாவுடன் சாஸ்தா சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை குருநாதர் மணிசங்கர் தலைமையில் அய்யப்ப பக்தர்கள் குழுவினர் செய்தனர்.