பதிவு செய்த நாள்
30
நவ
2022
02:11
புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி ஹார்ட் அட்டாக்கில் நடுரோட்டில் சுருண்டு விழுந்து இறந்ததால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
1997ம் ஆம் ஆண்டு புதுச்சேரி முதல்வராக ஜானகிராமன் இருந்தபோது, அவரின் முயற்சியால்,கெப்பேப் என்ற தனியார் நிறுவனம் சார்பில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு ஆறு வயது குட்டியாக அசாம் மாநிலத்தில் இருந்து, கேரளாவுக்கு வரவைக்கப்பட்டு, புதுச்சேரி மணக்குள விநாயர் கோவிலுக்கு, வழங்கப்பட்டது. கடந்த 26 ஆண்டுகளாக புதுச்சேரி மக்களின் செல்லமாக வாழ்ந்து வந்த 32 வயதுடைய லட்சுமி கடந்த ஒரு மாதமாக உடல் நல பாதிப்பால் ஓய்வில் இருந்து வந்தது. இன்று காலை 5:30 மணிக்கு நடைப்பயிற்சி சென்ற லட்சுமி, மிஷன் வீதியில் உள்ள கலவை கல்லூரி அருகில், காமாட்சி அம்மன் கோவில் வீதியில், திடீரென காலை 6:10 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு நடு ரோட்டில் சுருண்டு விழுந்து இறந்தது. இதனால் தகவல் அறிந்த பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து லட்சுமியின் உடல் மீது கதறி அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு உடனடியாக அமைச்சர் லட்சுமி நாராயணன், போலீஸ் உயர் அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள் பார்வையிட்டனர்.