அன்னூர்: நீலகண்டன்புதூர், செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. கஞ்சப்பள்ளி ஊராட்சி, நீலகண்டன் புதூரில், செல்வவிநாயகர் கோவிலில் வர்ணம் தீட்டுதல் உள்பட பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா இன்று மாலை விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. இரவு முதற்கால யாக பூஜையும், எண் வகை மருந்து சாத்துதலும் நடக்கிறது. நாளை (2ம் தேதி) அதிகாலையில் இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது, காலை 6:30 மணிக்கு செல்வ விநாயகர், விநாயகர், நாகர் மூஷிகம், பலிபீடம் ஆகியவற்றுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது, இதை அடுத்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை, கோ பூஜை நடக்கிறது. பூஜை நேரங்களில் வேதசிவாகம திருமுறை பாராயணம் நடக்கிறது.