* பொறாமையை கைவிடு. மகத்தான செயலை செய்யலாம். * உண்மையின் பாதையில் செல். வெற்றி உனக்கே. * உனக்குத் தேவையான வலிமை உனக்குள்ளே உள்ளது. * உலகம் போல உன்னுடைய இதயத்தை பெரிதாக்கு. * மனவலிமையும், இரக்க குணமும் கொண்டவனே உண்மையான வீரன். * உனது பலவீனமே உனக்கு துன்பமாக அமைகிறது. * உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே. * நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். * உன்னால் எதையும் சாதிக்க முடியும். * பலமே வாழ்வு. பலவீனமே மரணம். * கீழ்ப்படிய கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக வரும். * எப்போதும் உற்சாகமுடன் செயல்படு. இதுவே வெற்றியின் முதல் அறிகுறி. * ஆன்மிக பலத்தால் மட்டுமே ஒருவர் எழுச்சி பெறமுடியும். * பெற்றோரை சந்தோஷப்படுத்து. கடவுள் மகிழ்ச்சி அடைவார். * நீ செய்யும் தவறுகள்தான் உனக்கு வழிகாட்டும் தெய்வமாக இருக்கும். * அன்பின் மூலம் செய்யும் செயல் மகிழ்ச்சி தரும். * சாதனை புரியவே கடவுள் உன்னை படைத்திருக்கிறார். * உடல், மன பலவீனத்தை உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது. * பலவீனம் இடையறாத சித்ரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது. * ‘நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு’ என்று நினைத்துக்கொள்.