உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் மழை வேண்டி சேத்தாண்டி(சேறு பூசி) வேடமணிந்த சிறுவர்கள், வீடுவீடாக தானியங்களை சேகரித்து கூழ் காய்ச்சிவழிபாடுகள் செய்தனர். உசிலம்பட்டி பகுதியில் பருவமழை தாமதமாகி வருகிறது. மழைவேண்டி கிராம தெய்வங்கள் மாரியம்மன், காளியம்மன், கன்னிமார்களுக்குமக்கள் அனைவரின் பங்களிப்புடன் கூழ்காய்ச்சி வழிபாடு நடத்தினால்மழை பொழியும்என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது. உசிலம்பட்டி அருகே பாறைப்பட்டியில் சிறுவர்கள்"சேத்தாண்டி வேடமணிந்து வீடுவீடாகச்சென்று கம்பு, சோளம் போன்ற தானியங்களை சேகரித்தனர். அருகில் உள்ள மலையடிவாரத்தில் ஏழுகன்னிமார் தெய்வங்களுக்கு கூழ் காய்ச்சி ஊற்றி மழை வேண்டி வழிபாடுகள் செய்தனர்.