ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், விழாக்காலங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளும் தங்க கேடயத்தின் மேற்பகுதி ஓரத்தில், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் வேயப்பட்டிருந்த தங்க தகடுகள் வெட்டி எடுக்கப்பட்டது போல் சேதமடைந்துள்ளன. சுவாமி எழுந்தருளும் பல்வேறு வாகனங்களும் சேதமுற்றுள்ளன. ஆடித்திருக்கல்யாண உற்சவத்தின் போதும், கெந்தமாதன பர்வதம் மண்டபகப்படிக்கு எழுந்தருளல் நடந்தபோதும் சேதமடைந்த தங்க கேடயத்திலேயே சுவாமி, அம்பாள் உலா வந்தனர். எனவே, சேதமடைந்த கேடயத்தையும், மற்ற வாகனங்களையும் சீரமைக்க, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.