Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தர் முத்துக்குமார் சுவாமி ... சந்தனக்காப்பு அலங்காரத்தில் குரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிப்பு சந்தனக்காப்பு அலங்காரத்தில் குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மங்கலதேவி கண்ணகி கோயில் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்குமா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மங்கலதேவி கண்ணகி கோயில் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்குமா

பதிவு செய்த நாள்

02 டிச
2022
10:12

கூடலுார்: இந்து சமய அறநிலைத்துறை திருக்கோயில் நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் இடையே காணொளி காட்சி மூலம் இன்று நடக்கும் ஆய்வு கூட்டத்தில், தமிழக -கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் கண்ணகி பக்தர்கள் உள்ளனர். தேனி மாவட்டம் கூடலுார் அருகே விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று இங்கு விழா கொண்டாடப்படும்.

3 நாள் விழா: துவக்கத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்து வந்த விழா கேரள வனத்துறையின் கெடுபடியால் ஒரு நாளாக குறைக்கப்பட்டது. மேலும் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்கான நேரமும் 10 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைக்கப்பட்டது. இக்கோயிலுக்குச் செல்ல கேரளா குமுளி வழியாக 14 கி.மீ., தூரத்திற்கு கேரள வனப்பகுதியில் ஜீப் பாதை உள்ளது. தமிழகப் பகுதியான லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ., தூரத்திற்கு வனப்பகுதியில் நடைபாதை உள்ளது. நடந்து செல்ல முடியாத பக்தர்கள் பலர் கேரள வனப்பகுதி வழியாக ஜீப் பாதையை பயன்படுத்துகின்றனர். தமிழக வனப்பகுதி வழியாகவும் ஜீப் பாதை அமைக்க பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். கடந்த ஆண்டு தமிழக அரசு இப்பாதை அமைக்க சர்வே பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. தமிழக வரலாற்று சிறப்புமிக்க கோயிலில் பராமரிப்பு பணிகள் செய்யாமல் இருப்பதால் அழிந்து வருகிறது. இதனை சீரமைக்கக் கோரி மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் உச்சநீதமன்றத்தில வழக்கு தொடர்ந்து, நடந்து வருகிறது.

ஆய்வுக்கூட்டம்: இன்று வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையில் திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட வன அலுவலர், துணை இயக்குனர், கோட்ட அலுவலர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் கண்ணகி கோயிலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டு வரும் சித்ரா பவுர்ணமி விழாவில் தமிழக பக்தர்கள் சுதந்திரமாக வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணகி பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar