சித்தர் முத்துக்குமார் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2022 08:12
அவிநாசி: சேவூர் அருள்மிகு பத்ரகாளியம்மன், சித்தர் முத்துக்குமாரசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அவிநாசி அடுத்த சேவூரில் பத்ரகாளியம்மன், அருட்சித்தர் முத்துக்குமாரசுவாமி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிஷேகம் இன்று காலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெற்றது. இதையொட்டி நேற்று சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் இருந்து ஒட்டகம், குதிரை,ஜண்டை மேளத்துடன், தீர்த்த குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக பத்ரகாளியம்மன் கோவிலை சென்றடைந்தது இதனையடுத்து, மாணிக்கவாசக மூலாமனாய கூனம்பட்டி கல்யாணபுரி ஆதின 57ம் ஜகதகுரு ராஜ சரவணமாணிக்கவாசக சாமிகள் தலைமையில் விநாயகர் வழிபாடு, முதல் கால வேள்வி, தீபாரானையும் அதனைத் தொடர்ந்து அருளுரை வழங்கினார். இன்று காலை அவிநாசி, திருப்புக்கொளியூர் வாசீகர் மடாலய ஆதீனம் காமாட்சிதாசர் தலைமையில் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகமும், பத்ரகாளியம்மன்,சித்தர் முத்துக்குமாரசுவாமி ஆகிய தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதையடுத்து தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை பத்ரகாளியம்மன் திருவீதி உலா நடைபெறும். விழா ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டியினர் செய்து வருகின்றனர்.