ஸ்ரீரங்கம் கோயிலில் திருகார்த்திகை முகூர்த்தக்கால் நடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2022 09:12
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் திருகார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பானை முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கோயிலின் கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பானை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும். ஸ்ரீரங்கம் கோயில் உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி அதனை கண்டருள்வார். இதன்படி கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பானை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா கார்த்திகை கோபுரம் அருகே நேற்று மாலை நடைபெற்றது. இதில் சுமார் 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை மற்றும் பூமாலை உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் அணிவிக்கப்பட்டு கோயில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல் புனிதநீர் தெளிக்கப்பட்டது. சொக்கப்பானை அமைக்கும் பணி : இதனையடுத்து முகூர்த்தக்காலை கோயில் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோயில் யானைகள் ஆண்டாள், லெட்சுமி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின. இந்நிகழ்ச்சியில் கோயில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த பந்தக்காலை சுற்றி சுமார் 5 அடி அகலத்திற்கும், 20 அடி உயரத்திற்கும் சொக்கப்பானை அமைக்கும் பணி நடைபெறு உள்ளது.