திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2022 09:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு டிச. 28 முதல் தினம் காலை 8:00, மாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. கோயில் விசாக கொறடு மண்டபத்தில் சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு வெள்ளி குடங்களிலும், பரிவார மூர்த்திகளுக்கு சொம்புகளிலும் புனித நீர் நிரப்பி வைத்து பூஜை நடக்கிறது. டிச. 7 அன்று யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, விநாயகர், அஸ்தரதேவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
பக்தர்களுக்கு அழைப்பு: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் டிச. 6ல் மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. 300 லிட்டர் நெய், 150 மீட்டர் திரி, 5 கிலோ சூடம் மூலம் தீபம் ஏற்றப்படும். இதற்கு நெய் உபயமாக வழங்க விரும்பும் பக்தர்கள் அலுவலகத்தில் நேரில் வழங்கலாம் என கோயில் துணை கமிஷனர் சுரேஷ் தெரிவித்தார்.