பதிவு செய்த நாள்
05
டிச
2022
08:12
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் அரை மணி நேரத்தில், ஆன்லைன் மஹா தீப தரிசன டிக்கெட் விற்று தீர்ந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில் நாளை காலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதைக்காண, 500 ரூபாய் கட்டணத்தில், 500 அனுமதி சீட்டுகளும், மஹா தீப தரிசனம் செய்ய, 600 ரூபாய் கட்டணத்தில், 100 அனுமதி சீட்டுகளும், 500 ரூபாய் கட்டணத்தில் 1,000 அனுமதி சீட்டுகளும் ஆன்லைன் மூலம் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று காலை, 10:00 மணிக்கு விற்பனை தொடங்கியது. அரை மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. பரணி தீப தரிசனத்துக்கு, 6ம் தேதி அதிகாலை, 2:00 முதல், 3:00 மணி வரை; மஹா தீப தரிசனத்துக்கு பிற்பகல், 2:30 முதல், 3:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். கட்டண அனுமதி சீட்டு மற்றும் ஆதார் அட்டையுடன், அம்மணி அம்மன் கோபும் (வடக்கு கோபுரம்) வழியாக, குறிப்பிட்ட நேரத்துக்கு அனுமதிக்கப்படுவர். விபரங்களுக்கு, 1800 425 3657 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.