திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை, அதிக அளவில் முகூர்த்தங்கள் மற்றும் ஐயப்ப, முருக பக்தர்கள் வருகை என திருப்பரங்குன்றத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. கோயிலுக்குள் வழக்கமாக சிறப்பு தரிசனத்திற்கு ஒரு வரிசையும் இலவச தரிசனத்திற்கு மற்றொரு வரிசையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, மூலஸ்தானத்தில் ஒரே வரிசையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர். நேற்று பக்தர்கள் மிக அதிகளவில் வந்தனர். அதிகாலையில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். இதனால் இலவச தரிசனத்திற்கு இரண்டு வரிசைகளும், கட்டண தரிசனத்திற்கு இரண்டு வரிசைகளாக நிர்வாகம் மாற்றி அமைத்தது. இதனால் பக்தர்கள் எளிதாக தரிசனம் முடித்து செல்ல எதுவாக இருந்தது.