இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சங்காபிஷேகம், பிரதோஷ பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2022 10:12
மதுரை: இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் கார்த்திகை மூன்றாவது சோம வாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் கார்த்திகை மூன்றாவது சோமவாரம் முன்னிட்டு காலை சிறப்பு ஹோமம் மாலை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமான் மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி1008 சங்காபிஷேகம் அலங்காரம் ஆராதனை தீபாராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோயில் பிரகாரத்தை மூன்று முறைவலம் வந்து தீபாராதனை நடைபெற்று பிரதோஷம் பூஜை நிறைவு பெற்றது.
கார்த்திகை மாதம் மூன்றாவது சோமவாரம் முன்னிட்டு காலை சிறப்பு ஹோமம் மாலை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இந்த வழிபாட்டில், பக்தர்கள், கண்காணிப்பாளர் கணபதி ராமன் மற்றும் கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.