Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூரில் கைசிக ஏகாதசி: ... ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 டிச
2022
05:12

நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவிலில் கார்த்திகை 3வது சோமவார 1008 சங்காபிஷேகம் மற்றும் பிரதோஷ பூஜை நடந்தது.

மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கும், நந்தீஸ்வரருக்கும் பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 21 வகை அபிஷேக பொருட்களைக் கொண்டு திரவிய அபிஷேகம் நடந்தது. பின் கோவில் வளாகத்தில் 1008 சங்குகள் மற்றும் வெள்ளியால் ஆன சங்கு, பல வண்ண மலர்கள், நெல் மணி, சிவன் படம் உள்ளிட்டவைகளை கொண்டு சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டது. அதன் முன் யாக குண்டம் வளர்த்து சிறப்பு யாக பூஜை நடந்தது. பின் பூஜை செய்யப்பட்ட 1008 சங்குகளையும் எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க பக்தர்கள் கோவிலை சுற்றி வந்தனர். அதன் பின் சங்குகளில் உள்ள தீர்த்தங்களை கொண்டு கைலாசநாதருக்கு சங்காபிஷேகம் நடந்தது. பின் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திண்டுக்கல்,கோபால்பட்டி, சாணார்பட்டி, செந்துறை, மணக்காட்டூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar