திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு ஜீயர் சுவாமிகள் பிரம்மரதத்தில் வீதி உலா நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், கைசிக ஏகாதசியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு பஞ்ச சம்ஸ்காரம், 9:30 மணிக்கு பக்தர்களுக்கு சமாஸ்ரயணம் செய்து வைக்கும் வைபவம் நடந்தது. இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் வீதியுலா நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் மூலஸ்தானத்தில் கைசிக புராணம் வாசித்தார். தொடர்ந்து 9:00 மணிக்கு பிரம்ம ரதத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. கோவில் ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். வைணவ பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.