Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜோதி வடிவாய் திருப்பரங்குன்றம் : ... வடபழநி ஆண்டவர் கோவிலில் கார்த்திகை தீபம் உற்சாக கொண்டாட்டம் வடபழநி ஆண்டவர் கோவிலில் கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றக்குடியில் கார்த்திகை தீப விழா குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
குன்றக்குடியில் கார்த்திகை தீப விழா குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

06 டிச
2022
07:12

காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில், கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சண்முகநாதப் பெருமான் ஆறு திருமுகங்களோடும் பன்னிரு கரங்களோடும் காட்சியளிக்கும் தலமாக குன்றக்குடி கோயில் உள்ளது. கார்த்திகை தீபத்திருநாளான இன்று காலை நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு சந்தன அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடந்தது. காரைக்குடி மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நடைபயணமாக குன்றக்குடி கோயிலுக்கு சென்று, கோயிலில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். மாலையில், மலை உச்சியில் இருந்து சுவாமி கீழிறங்கி கார்த்திகை மண்டபத்தில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன பூஜை மடத்தில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், சொக்கப்பன் கொளுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து கார்த்திகை மடத்தில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நேற்று துவங்கியது.கேரள மாநிலத்தின் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலில் ரஷ்யாவைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பித்தளை வேல் காணிக்கையாக ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உலக நன்மைக்காக பவித்திர பூஜையில் ஏராளமானோர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷம், அமாவாசை ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; கள்ளழகர் கோயிலில் நேற்று உண்டியல் திறப்பு நடந்தது. இணை கமிஷனர் செல்லதுரை, உதவி கமிஷனர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar