பதிவு செய்த நாள்
10
டிச
2022
08:12
பழநி:பழநி மலைக்கோயிலில் கும்பாபிஷேக பணிகளில் மலைக்கோயில் உள்ள சன்னதிகள், படி பாதையில் உள்ள சன்னதிகளுக்கு கருவறை பாலாலயம் துவங்கியது.
பழநி, மலைக்கோயில் கும்பாபிஷேக பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலை மலைக்கோயில் தென்மேற்கு மூலையில் உள்ள பெரியநாயகி அம்மன், பிரகதீஸ்வரர் சன்னதிகளுக்கு கருவறை பாலாலய பூஜைகள் துவங்கியது. (டிச.10.) நேற்று மாலை 5:00 மணிக்கு சொக்க விநாயகர், தண்டாயுதபாணி சுவாமி அனுமதி பெற்று பாரவேல் மண்டபத்தில் பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டது. மாலை 6:45 மணிக்கு கலாகர்ஷணம், வேள்வி சாலை அடைதல், முதல் வேள்வி துவங்கியது. இன்று (டிச.,11) காலை 8:30 மணிக்கு இரண்டாவது கால வேள்வி துவங்க உள்ளது. கனி கிழங்கு மூலிகை வேள்வி நடைபெறும். காலை 9:30 மணிக்கு பேரொளி வழிபாடு, நிறைவு வேள்வி, திருக்குடங்கள் திருவுலா நடைபெறும். காலை 10:15 மணிக்கு பாலஸ்தாபனம் திருப்பணி துவங்கி திருநீறு திருவமுது வழங்குதல் நடைபெறும்.
படிப்பாதையில் உள்ள இடும்பன், கடம்பன், அகஸ்தியர், சிவகிரீஸ்வரர், இடும்பன் சன்னதிக்கு பின்புறம் உள்ள நிழல் மண்டப விநாயகர் இடும்பன் சன்னதிக்கு கிழக்குபபுறமுள்ள விநாயகர் சன்னதி கருவறை பாலாலயம் மாலை 5:00 மணிக்கு தொடங்கியது. மாலை 6:30 மணிக்கு கலாகர்ஷணம், வேள்வி சாலை அடைதல், முதல் வேள்வி துவங்கியது. இன்று (டிச.,11) காலை 7:00 மணிக்கு இரண்டாவது கால வேள்வி நடைபெறும் காலை 8:30 மணிக்கு பேரொளி வழிபாடு, நிறைவு வேள்வி, திருக்குடங்கள் திருவுலா நடைபெறும். காலை 9:00 மணிக்கு பாலஸ்தாபனம் திருப்பணி துவங்கி திருநீறு திருவமுது வழங்குதல் நடைபெறும். ஆரிய மண்டபத்தில் உள்ள வள்ளியம்மை சன்னதியின் கருவறை பாலாலயம் இன்று காலை 6:30 மணிக்கு அனுமதி பெறுதல். பூர்வாங்க பூஜைகள் துவங்கி, காலை 7:15 மணிக்கு கலாகர்ஷணம், வேள்வி சாலை அடைந்து, வேள்வி துவங்கும். காலை 8:15 மணிக்கு நிறைவு வேள்வி, திருக்குட ஞாண திருஉலா நடைபெறும். காலை 8:45 மணிக்கு பாலஸ்தாபன திருப்பணி துவங்கி, திருநீறு திருவமுது வழங்குதல் நடைபெறும். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள கோயில் இணைஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.